"ரெண்டு பக்கமும் மக்கள்"..."ஊரடங்கு நேரத்துல"... 'மலர்' தூவ நடந்து வந்த 'ரோஜா... 'சர்ச்சை'க்குள்ளான வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 21, 2020 09:07 PM

தமிழ் நடிகையான ரோஜா, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின்சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கட்சியின் மகளிரணி தலைவராகவும் உள்ள ரோஜா கொரோனா சமயத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Video of MLA Roja walking among flower creates controversy

இந்நிலையில், இணையத்தில் வெளியான ரோஜா சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று நெட்டிசன்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் தனது தொகுதியான நகரியில் உள்ள ஒரு பகுதியில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அங்கு வருகை தந்துள்ளார். அப்போது அந்த ஊர் மக்கள் தெருவின் இரு பக்கமும் நின்று கொண்டு ரோஜா நடந்து வரும் போது மலர் தூவி வாழ்த்துகின்றனர். இதனை ரோஜாவும் மறுக்காமல் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார்.

இந்த வீடியோ தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பூ போட்டு வாழ்த்தி மக்கள் சூழ நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி தேவை தான என பலர் தங்களது முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.