"இதுவும் பொண்ணோட கடமை தான்".. 59 வயது தாய்க்கு மணமகன் தேடிய மகள்.. மனம் நெகிழ வைக்கும் பின்னணி
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது இணையத்தில் ஏதாவது மனதை நெகிழ வைக்கக் கூடிய வீடியோக்கள் அல்லது செய்திகள் வெளியாகி, பலரது மனதையும் வருடும் வகையில் அமையும். அப்படி ஒரு சம்பவம் தான், கேரள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
Also Read | ஸ்கூட்டரில் ஜாலி ரைடு போன விராட் - அனுஷ்கா ஜோடி??.. வைரலாகும் வீடியோ!!.. பின்னணி என்ன?
கேரள மாநிலம், திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ரதிமேனன். 59 வயதாகும் இவரது கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ரதி மேனனுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். தனது கணவர் இறப்பதற்கு முன்பாகவே, ரதி மேனனின் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு மகள்களும் தங்களது கணவர்களின் வீட்டில் சேர்ந்து வசித்து வருகின்றனர். மறுபக்கம், தனது வீட்டில் ரதி மேனன் தனியாகவும் வசித்து வந்துள்ளார்.
59 வயதாகும் தனது தாயார் தனியாக வசித்து வருவதால், அதனை உணர்ந்த மகள் பிரசிதா, மிகவும் உணர்ச்சிகரமான ஒரு முடிவையும் எடுத்துள்ளார். தனது தாய்க்கு துணையாக ஒருவரை தேடி பிடித்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவு தான் அது. ஆனால், மறுமணம் குறித்து தாய் ரதியிடம் பிரசிதா விவாதித்த நிலையில் இதற்கு ஆரம்பத்தில் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மறுபக்கம், தாய்க்கு மணமகனையும் தேடி வந்துள்ளார் பிரசிதா. அப்படி ஒரு சூழ்நிலையில், அதே பகுதியை சேர்ந்த திவாகரன் என்பவரை பிரசிதா சந்தித்துள்ளார். 63 வயதாகும் திவாகரன் என்பவர், மனைவியை இழந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு இரண்டு மகள்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வேளாண் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தாய் ரதிமேனனுக்கு பொருத்தமாக இருப்பார் என்றும் பிரசிதா முடிவு செய்துள்ளார்.
மேலும், திவாகரனிடம் தனது தாயின் நிலை பற்றி, பிரசிதாவும் விளக்க, இதனை புரிந்து கொண்ட தினகரன், ரதிமேனனை திருமணம் செய்யவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக, தாய் ரதிமேனனை பல காரணங்கள் சொல்லி, சம்மதம் வாங்கி உள்ளார் பிரசிதா. இதன் பின்னர், ரதி மேனன் - தினகரன் திருமணம், திருச்சூர் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து சமீபத்தில் நடைபெற்றுள்ளது. மேலும், உறவினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
தாய்க்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக பேசிய மகள் பிரசிதா, "அப்பா திடீரென மரணம் அடைந்ததால், எங்கள் அம்மா தனிமையில் இருந்தார். நாங்களும் திருமணத்திற்கு பிறகு, கணவர், குழந்தைகள் என வாழ்ந்து வந்ததால், அம்மாவை நேரில் வந்து பார்க்க முடியவில்லை. இதனால், தாயின் தனிமையை போக்க இந்த திருமணத்தினை ஏற்பாடு செய்தோம்" என தெரிவித்துள்ளார்.