பெரும் சோகம்.! பிரபல இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர் & தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மரணம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல தொழிலதிபரும், பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 62.
![Share Market Investor Rakesh Jhunjhunwala Dies ராகேஷ் ஜுன்ஜுன்வாலா Share Market Investor Rakesh Jhunjhunwala Dies ராகேஷ் ஜுன்ஜுன்வாலா](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/share-market-investor-rakesh-jhunjhunwala-dies.jpg)
மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலை 6.45 மணிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுமார் 5.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா என அண்மையில் பிரபலங்களில் சொத்து மதிப்புகளை வரிசைப்படுத்தும் நாளிதழான போர்ப்ஸ் நாளிதழ் தெரிவிதிருந்தது.
இதேபோல், ஆகாசா எனும் புதிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை அண்மையில், ராகேஷ் ஜுன் ஜுன்வாலா தொடங்கியிருந்தார். இந்த ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடக்க விழாவில் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா வந்திருந்ததை அனைவராலும் காண முடிந்தது.
இந்நிலையில் தற்போது மரணம் அடைந்துள்ள தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் குடும்பத்தினருக்கு அரசியல் பிரபலங்கள், தொழில்துறை நிபுணர்கள், சக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)