ரெயில்வே ஸ்டேஷனுக்கு 'பெயர்' இன்னும் வைக்கல.. வெறும் போர்டு மட்டும் தான் இருக்கும்.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 13, 2022 02:40 PM

மேற்கு வங்காளம்: மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியில் இன்னும் பெயர் கூட வைக்காத ரயில்வே நிலையம் ஒன்று இயங்கி வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

An unnamed board railway station in West Bengal

இந்தியாவில் செயல்படும் அனைத்து இரயில்வே நிலையங்களுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். எந்த ரயில் நிலையத்திற்கும் பெயர் இல்லாமல் இருக்காது. ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக மேற்கு வங்க ரயில் நிலையம் மட்டுமே பெயர் இல்லாமலேயே இயங்கி வருகிறது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் இருக்கும் புர்த்வான் மாவட்டத்தில்தான் இந்த வித்தியாசமான ரயில் நிலையம் இயங்கி வருகிறது. புர்த்வான் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் உள்ளது.

An unnamed board railway station in West Bengal

பெயர் வைக்கும்போது கிளம்பிய பஞ்சாயத்து:

இந்த ரயில் நிலையம் ரெய்னா என்ற கிராத்தில் உள்ளது. கிராமப்புறமான அந்த அப்பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு தான் ஒரு ரயில் நிலையம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் எல்லாம் பிரமாதமாக நடந்து முடிந்த நிலையில் ரயில் நிலையத்திற்குப் பெயர் வைக்கும்போது ஒரு பஞ்சாயத்து கிளம்பியது.

அதாவது ரெய்னா கிராமத்து மக்களுக்கும், ரய்நகர் கிராம மக்களுக்கும் இடையே ரயில் நிலையப் பெயர் வைப்பது குறித்து சலசலப்பு ஏற்பட்டது. ஏனென்றால், முதலில் ரய் நகரில் முன்பு ரய் நகர் ரயில்வே நிலையம் காணப்பட்டது.

குறுகலாக இருந்த பிளாட்பாரம்:

ஆனால், அந்த ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் மிகவும் குறுகியதாக இருந்ததால், அந்த ரயில் நிலையத்தைக் கைவிட்டுத்தான் ரெய்னாவில் புதிய ரயில் நிலையம் கட்டினர். இதன் காரணமாக புதிதாக கட்டப்பட்ட ரயில் நிலையத்திற்கு ரய் நகர் ரயில் நிலையம் என்று பெயர் சூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

பெயர் இல்லாமல் இயக்கம்:

ஆனால் இதற்கு ரெய்னா கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பெயர் சூட்டப்படவில்லை. அன்று முதல் இன்று வரை இந்த ரயில் நிலையம் பெயர் இல்லாமலேயே இயங்கி வருகிறது. இந்த பெயர் சூட்டப்படாத ரயில் நிலையத்திற்கு பங்குரா - மஸக்ராம் இடையிலான ரயில் ஒரு நாளைக்கு 6 முறை வந்து செல்கிறது.

இந்த ரயில் நிலையத்திற்கு முதல் முறையாக வரும் எல்லாப் பயணிகளும், பெயரே இல்லாமல் வெறும் மஞ்சள் போர்டு மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைவார்கள். இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படி பெயர் இல்லாமல் இரயில் நிலையம் அமைந்திருக்கும் என பலர் மண்டையை குழப்பி கொண்டு இருக்கின்றனர்.

Tags : #ரெயில்வே நிலையம் #RAILWAY STATION #WEST BENGAL #BOARD #NAME #பெயர் பலகை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. An unnamed board railway station in West Bengal | India News.