'கிரிக்கெட்'லயும் மாஸ் காட்டி.. இப்போ தேர்தல் களத்திலும் பட்டையை கிளப்பும் 'வீரர்'.. வாக்கு எண்ணிக்கையில் 'அதிரடி'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் தேர்தல் நடைப்பெற்றிருந்த நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சுமார் 200 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகித்து வருகிறது. மேற்கு வங்காளத்தின் முதல்வராகவுள்ள மம்தா பானர்ஜி, தற்போதைய தேர்தலிலும், மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிப்பதால், அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம், இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, மம்தா பானர்ஜி முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அரசியல் குறித்து, அதிகம் கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில், மனோஜ் திவாரி அரசியல் கட்சியில் இணைந்து கொள்ள முடிவு செய்து, அதன்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்காளத்தின் ஷிப்பூர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், மனோஜ் திவாரி போட்டியிட்டிருந்தார். இதே தொகுதியில், பாஜக கட்சி சார்பில், ரத்தின் சக்ரபார்த்தியும் போட்டியிட்டார்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், பாஜக வேட்பாளர் ரத்தின் சக்ரபோர்த்தியை விட, கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான மனோஜ் திவாரி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.