'இது எங்க கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம்...' 'அப்படிலாம் சும்மா விடமாட்டோம்...' கர்நாடகா கொடியைக் கொண்டு 'அமேசான்'ல விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த 'பொருள்'...! - குவியும் கண்டனங்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநில கொடியை அவமதிக்கும் விதமாக அமேசான் நிறுவனம் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கூகுளில் 'இந்தியாவிலேயே மோசமான மொழி எது?' என ஆங்கிலத்தில் தேடியப்போது, அது கன்னட மொழியை காட்டியது.
இந்த சம்பவம், கர்நாடக மாநில மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் இந்த சம்பவத்திற்காக கூகுள் நிறுவனம் மன்னிப்பும் கோரியது.
அந்த சர்ச்சையே அடங்காத சூழலில் தற்போது, அமேசான் நிறுவனம். கர்நாடக மாநில கொடியின் மஞ்சள் & சிவப்பு வண்ணத்தில், கர்நாடக மாநில அரசின் சின்னம் பொறித்த பிகினி உடை அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது
இது இன்னும் கர்நாடக மக்களையும், அரசியல் கட்சிகளையும் கடுப்பில் ஆழ்ந்தயுள்ளது எனலாம். ஒரு பன்னாட்டு நிறுவனமான அமேசான், கர்நாடக மாநில அரசின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டிருப்பது கன்னட மக்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்துள்ளது பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, கர்நாடக வனம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பவல்லி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'கூகுள் நிறுவனத்தால் கன்னட மக்களான நாம் சமீபத்தில் அவமதிக்கப்பட்டோம். அந்த நிகழ்வே மறையாத நிலையில் மீண்டும் கன்னட கொடியின் வண்ணங்கள் மற்றும் அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட பெண்களின் ஆடைகளை அமேசான் பயன்படுத்தியிருக்கிறது.
இம்மாதிரி கன்னடத்தை மீண்டும் மீண்டும் அவமதிப்பதை பன்னாட்டு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும். இது கன்னட மக்களின் கவுரவம் தொடர்பான விஷயம், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அமேசான் நிறுவனம் உடனடியாக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை அமேசான் மீது எடுக்கப்படும்' அமைச்சர் அரவிந்த் லிம்பவல்லி தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த சம்பவம் தொடர்பாக,,, அமேசான் நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி கன்னட ரக்ஷன வேதிகே உட்பட பல்வேறு கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இம்மாதிரி கன்னட கொடி, சின்னம் பொறித்த பிகினி ஆடையை CafePress எனப்படும் நிறுவனம், அமேசானின் கனடா தளத்தில், விற்பனைக்கு பட்டியலிட்டிருப்பது தெரிய வந்துள்ளது அதோடு இது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேஷ் ஜெயின் என்பவரின் நிறுவனம் எனவும் கூறப்படுகிறது.
We experienced an insult of Kannada by @Google recently. Even before the scars could heal, we find @amazonca using the colours of #Kannada flag and the kannada icon on ladies’ clothes 1/2
— Aravind Limbavali (@ArvindLBJP) June 5, 2021