இந்தியாவில் மே 17-க்கு பின் தொடங்கும் ‘விமான சேவை’.. பயணிகள் ‘கட்டாயம்’ செல்போனில் இந்த ‘ஆப்’ வச்சிருக்கணும்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் மே 17ம் தேதிக்கு பிறகு விமான சேவை தொடங்க உள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 நாள்களுக்கும் மேலாக விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இதனை அடுத்து டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மே 17-க்கு பின் சில கட்டுப்பாடுகளுடன் 25% விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் அவர்களது செல்போனில் ஆரோக்ய சேது ஆப்பை வைத்திருக்க வேண்டும் என்றும், மாஸ் அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்துக்கு குறைவான பயண நேரம் கொண்ட விமானங்களில் உணவுப் பொருள்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் விமான சேவையை தொடங்க பணிகள் தயார் நிலையில் இருப்பதாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.