‘ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவு’.. விரக்தியில் தனியாக வெளியேறிய வேட்பாளர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | May 23, 2019 04:29 PM
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தால் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

மக்களவை மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற இடைதேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக 300 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக தமிழகத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதில், நெல்லை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பால் மனோஜ்பாண்டியன், திமுக சார்பில் ஞானதிரவியம் மற்றும் இதர கட்சிகள் சார்பாக வேட்பாளர்கள் களமிறங்கினர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக வேட்பாளர் ஞானதிரவியம் முன்னிலை வகித்து வந்தார். ஒவ்வோரு சுற்றின் முடிவிலும் திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.
இதனை அடுத்து 10 -வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் 2,41,998 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பால் மனோஜ்பாண்டியன் 1,52,828 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் பால் மனோஜ்பாண்டியன் 89,170 வாக்குகளில் பின்னடைவை சந்தித்தார். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறி தனியாக நடந்து சென்றார்.
