‘10 அடி நடக்க 10 நிமிடங்கள் ஆகிறது’ மோடியின் கிண்டலை மீறி ஆட்சியை நோக்கி மக்கள் முதல்வர்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 23, 2019 01:22 PM

72 வயதான நவீன் பட்நாயக் 5-வது முறையாக ஒடிசா முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

naveen patnaik set to become CM for the fifth time

ஒடிசாவின் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ‘மாற்றத்தை எதிர் நோக்குகிறது ஒடிசா, இங்கு வளர்ச்சி இல்லை, மந்தமான ஆட்சி’ என விமர்சித்து பிரச்சாரம் செய்திருந்தார் மோடி. அதையெல்லாம் மீறி 100க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது பிஜு ஜனதாதளம். பிஜேபி 27 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

1998 முதல் 2009 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த பிஜு ஜனதாதளம் அதன் பின் காங்கிரஸ், பாஜகவிடமிருந்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்டது. இந்நிலையில் அவரது வயதையும், உடல் நிலையையும் குறிப்பிட்டு பிரதமர் மோடி, ‘ஒடிசா அரசு 10 அடி நடக்க 10 நிமிடங்கள் ஆகிறது’ எனக் கிண்டல் செய்திருந்தார். அவற்றையெல்லாம் மீறி மக்கள் முதல்வர் என அழைக்கப்படும் நவீன் பட்நாயக் 5-வது முறையாக முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #LOKSABHAELECTIONRESULTS2019 #ELECTIONRESULTS2019 #VOTECOUNTING