‘கள்ளச்சந்தையில் 1 லட்சம் காஸ்ட்லி மாஸ்க்!’.. ‘அறுவை சிகிச்சைக்கு ஏற்பட்ட பற்றாக்குறை’.. கொரோனாவை பயன்படுத்தி உறையவைத்த 3 பேர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 18, 2020 06:08 PM

உக்ரைனில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் தவிக்கும் மக்களிடம் 1 லட்சம் முகக் கவசங்களைத் திருடி நம்பமுடியாத விலைக்கு விற்ற 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 ukrainians arrested for stealing 100 surgical masks

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரைக்கும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இவர்களுள், ஐரோப்பாவில் மட்டும் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளில் மூடி வைத்துமுள்ளன.  இதனிடையே உக்ரைன் நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 7 பேர் ஆளாகி உள்ளதாகவும் அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும், அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிப்பதாக உக்ரைன் அரசு அறிவித்ததோடு மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க உணவகங்கள், வணிக மையங்கள் உள்ளிட்டவற்றை மூடுவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு சம்பவத்தில் உக்ரைனில் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தக்கூடிய அரிதான 1 லட்சம் முகக் கவசங்களைத் திருடி, அதிக விலைக்கு கள்ள சந்தையில் கொண்டுவந்து விற்கப்பட்டதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இவ்வாறு அதிக முகக் கவசங்களை கள்ளச்சந்தையில் திருட்டுத்தனமாக, அதிக விலைக்கு விற்றதால் அறுவை சிகிச்சைக்கான முகக் கவசங்கள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டது. 

இந்தநிலையில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட இந்த கும்பலில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அவர்கள் அனுபவிக்க நேரும் என்று அந்நாட்டில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்ப மருத்துவர்கள் பயன்படுத்தப்படும் காஸ்ட்லியான மாஸ்க்தான் சர்ஜிக்கல் மாஸ்க். இதற்கு அடுத்த நிலையில் இருப்பதுதான் N-95 மாஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த மாஸ்க் அதிக அளவில் கொரோனா தொற்று தடுப்புக்காக பலராலும் பயன்படுத்தப்படுகிறது. 

Tags : #MASK #UKRAIN