தொடர்ந்து 49 ஆண்டு பக்தி பயணம்.. 99 வயதிலும் சபரிமலை ஐயப்பனை காண வந்த வைரல் பாட்டி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Dec 13, 2022 08:16 PM

கேரளாவை சேர்ந்த 99 வயதான மூதாட்டி ஒருவர் கடந்த 49 வருடங்களாக சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

99 YO Woman who visited sabarimalai aiyyappan Temple For 49 Years

Also Read | "தல ஒரு ஆட்டோகிராஃப்".. ரசிகர் வச்ச கோரிக்கை.. நெகிழ வச்ச தோனி.. ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ..!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு இருந்து சாமி தரிசனம் செய்ய துவங்குவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுகளுக்கான கோவில் நடை  கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. அது முதலே லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த வயதான மூதாட்டி தேவ். தற்போது அவருக்கு 99 வயதாகிறது. சிறுவயதில் இருந்தே ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என ஆசைப்பட்ட தேவ், தனது 51 வயதில் தான் அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். தற்போது வரையில் கண்ணாடி அணியாமல், யாருடைய துணையும் இல்லாமல் நடந்து வரும் இந்த மூதாட்டியை தேவசம் போர்டு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதித்திருக்கிறது.

99 YO Woman who visited sabarimalai aiyyappan Temple For 49 Years

ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. ஆன்லைன் முன்பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு உதவும் வகையில் சபரிமலை பாதையில் 13 இடங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை சபரிமலையின் பொன்னம்பலமேட்டில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு சபரிமலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

99 YO Woman who visited sabarimalai aiyyappan Temple For 49 Years

இந்நிலையில், வீல் சேர் மூலமாக தரிசனம் செய்யும் முகப்பிற்கு வந்த மூதாட்டி தேவ், ஐயப்பனை கண்ணாற கண்டு பிரார்த்தித்தார். அதன்பிறகு, ஐயப்ப விக்ரகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பொருட்களை நம்பூதரி வெளியே வந்து பிரசாதமாக அளித்தார். இதனையடுத்து மூதாட்டியை கண்டு ஆச்சர்யமடைந்த சக பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டதுடன் அவர் குறித்தும் விசாரித்து தெரிந்துகொண்டனர். 99 வயதிலும் சபரிமலை ஐயப்பனை காண வந்திருந்த தேவ் பாட்டியை கண்டு பக்தர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

Also Read  | மாரியம்மனை தரிசிக்க சென்ற 4 பெண்களுக்கு நேர்ந்த சோகம்.. நடுக்காட்டில் நடந்த துயரம்.. உதகையில் பரபரப்பு..!

Tags : #KERALA #OLD WOMAN #SABARIMALAI #SABARIMALAI AIYYAPPAN TEMPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 99 YO Woman who visited sabarimalai aiyyappan Temple For 49 Years | India News.