என்னது நிலவுல 'தண்ணி' இருக்கா..? சீன விண்கலம் வெளியிட்டுள்ள முக்கிய ஆதாரம்
முகப்பு > செய்திகள் > உலகம்சீனா: சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலவின் தரைப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனா: சீனா கடந்த 2020-ஆம் ஆண்டு சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள சாங்கே-5 என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. நிலவின் மத்திய உயர் அட்சரேகை பகுதியில் தான் சாங்கே-5 தரையிறக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கிய சாங்கே-5 விண்கலத்தின் லேண்டரில் உள்ள ஒரு கருவி தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. அதன்பின்னர் சுமார் 1,731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சாங்கே-5 விண்கலம் கொண்டுவந்த அந்தப் பாறை மாதிரியை சீன அறிவியல் அகாதெமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளயிட்டுள்ளானர்.
தண்ணீர் உள்ளதா?
அதில், நிலவின் தரைப்பரப்பில் உள்ள பாறைப் படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு காரணம் சூரிய காற்று ஆகும். குறிப்பாக இதுதான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ' ககன்யான் என்ற திட்டத்தின் மூலம், பூமியில் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மனிதர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அவர்களை பாதுகாப்பாக பூமிக்குக் திரும்ப கொண்டு வருவதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதே ஆகும்.
இந்த திட்டத்தை இந்தியா செய்து முடித்தால் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டுசெல்லும் உலகின் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழாவிற்கு (ஆகஸ்ட் 15, 2022) முன்பு ககன்யான் திட்டத்தின்படி, முதல் ஆளில்லா விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.