எங்க சர்வீஸ்ல 'இப்படி' ஒரு கேஸ் பார்த்ததே இல்ல...! 'மொத்தம் 156 கற்கள்...' - 'அதிர்ந்து' போன மருத்துவர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐதராபாத்தில் சிறுநீரக ஆப்ரேஷன் மேற்கொண்ட ஒருவரின் உடலில் இருந்து 156 கற்கள் எடுக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் 50 வயதான பசவராஜ். ஆசிரியரான இவருக்கு அடிக்கடி அடி வயிறு வலி தீவிரமாக ஏற்பட்டும் நிலையில் ஐதராபாத்தில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பசவராஜ்ஜை பரிசோதனை செய்த மருத்துவக்குழு அவரின் சிறுநீரகத்தில் அதிக எண்ணிக்கையில் கற்கள் இருப்பதை கூறியுள்ளனர். மேலும், பல சோதனைகள் மேற்கொண்ட பின் அவருக்கு எண்டோஸ்கோப்பி மற்றும் லேப்ரோஸ்கோப்பி முறையை பயன்படுத்தி கற்களை வெளியே எடுக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்பின் 3 மணி நேரம் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சை மூலம் சுமார் 156 கற்கள் வெற்றிகரமாக அவரின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தியாவில் எண்டோஸ்கோப்பி மற்றும் லேப்ரோஸ்கோப்பி முறையை பயன்படுத்தி ஒரு நோயாளியிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
அதுமட்டுமில்லாமல் இவருக்கு சாதாரண நபர்களை விட, நோயாளிக்கு வித்தியாசமான சிறுநீரகம் இருப்பதாக கூறிய மருத்துவர்கள், இதனால் பிரச்னை இல்லை என்றும், வித்தியாசமான சிறுநீரகத்தில் இருந்து கற்களை அகற்றுவது தான் சவாலாக இருந்தது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த 156 கற்களும் கடந்த 2 ஆண்டுகளாக உருவாகியுள்ளது எனவும் முதலில் எந்த அறிகுறியும் தென்படாத சூழலில் கடந்த சில வாரங்களாக வலி அதிகரித்ததன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்.