'ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய பிறகு...' 'நடராஜன் பதிவிட்ட முதல் ட்வீட்...' - இப்போ எப்படி இருக்காரு...?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த தமிழக கிரிக்கெ வீரர் நடராஜனுக்கு காலில் அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இளம் கிரிக்கெட் வீரரான நடராஜன் டி.என்.பி.எல் போட்டிகள் ஆடி வந்தார். அதில் சிறப்பாக தன் பங்களிப்பை செலுத்திய காரணத்தினால் இந்திய அளவில் கவனம் பெற்று ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்று பயணத்தில் இந்திய அணியிலும் இடம்பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக அவருடைய ஆட்டம் அமைந்தது.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். அப்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல்லில் விளையாடவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடராஜனுக்கு தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் ட்விட்டரில் மருத்துவமனையில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடராஜன். அதில், இன்று எனக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. மேலும், தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தனக்காக வேண்டிக் கொண்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
Today, I underwent knee surgery- and am grateful for the expertise, attention and kindness of the medical team, surgeons, doctors, nurses and staff. I’m grateful to @bcci and to all that have wished well for me. pic.twitter.com/Z6pmqzfaFj
— Natarajan (@Natarajan_91) April 27, 2021

மற்ற செய்திகள்
