“32,000 பேருக்கு கூண்டோட நேர்ந்த கதி!”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு!.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ!’
முகப்பு > செய்திகள் > உலகம்1600 பைலட்கள் மற்றும் 32 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளன அமெரிக்காவின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ்.
மேற்கண்டவாறு ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை தொடங்கி விட்டதாக இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கொரோனவைரஸ் காலத்தில் பல நிறுவனங்கள் செயல்பட முடியாமல் இருப்பதுடன் ஊழியர்களை வேலை நீக்கம், சம்பள குறைப்பு உள்ளிட்டவற்றுக்கு பணித்து வருகின்றன. அத்துடன் அமெரிக்க அரசிடம் இருந்து கிடைக்கும் நிவாரணத்தொகை பற்றிய நம்பிக்கை ஏறக்குறைய முடிந்து போனதால் இத்தகைய முடிவை மேற்கண்ட நிறுவனங்கள் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
எனினும் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் வாய்ப்புள்ளதாக அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மெமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13% ஊழியர்கள் இப்படியான கட்டாய விடுவிப்புடன் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படும் நிலையில் டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பத்தாயிரம் கணக்கானவர்கள் இப்படியான விடுவிடுப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இன்னொருபுறம் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 25 பில்லியன் டாலர் தொகையை 6 மாத சம்பளமாக கொடுக்க அரசிடம் கோரிய நிவாரணம் தொடர்பான பேச்சுவார்த்தை நீடித்து வருவதாகவும் விமான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளித்துள்ள மெமோவில் குறிப்பிட்டுள்ளன.
இதனால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சுமார் 1,600 பைலட்கள், 19 ஆயிரம் ஊழியர்களை கட்டாய பணிவிடுப்பு செய்துள்ளதாகவும் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 13,000 ஊழியர்களை பணி விடுவிப்பு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விமான ஊழியர்கள் கூட்டமைப்பு இதுபற்றி கூறும்போது நாளை காலை எழுந்தால் பல பத்தாயிரம் பேருக்கு வேலை இருக்காது என்றும் கவலையுடன் தெரிவித்துள்ளது.