அப்றம் என்ன இந்த தீபாவளிக்கு செம ‘ஜாலி’ தான்.. பள்ளி மாணவர்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளி பண்டிகையையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனை அடுத்து நவம்பர் 16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இந்த முடிவுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பெற்றோர் கருத்து கேட்பு கூட்டத்தில், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கூறினர்.
இதனையடுத்து பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்தது. மேலும் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மாணவர்களுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் நான்கு நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
