'பியூச்சர்ல இதோட மதிப்பு மட்டும்'... 'ஊழியர்களுக்கு கோடிகளில் அள்ளிக்கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் CEO!'... - “செம ஹாப்பி அண்ணாச்சி!!!”
முகப்பு > செய்திகள் > வணிகம்நிகோலா கார்ப்பரேஷனின் நிறுவனர் அதன் ஊழியர்களுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள பங்குகளை கொடுத்துள்ளார்.

நிகோலா கார்ப்பரேஷன் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை வடிவமைப்பது, தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் நிறுவனரும், தலைவருமான ட்ரெவர் மில்டன் தன்னுடைய நிறுவனத்தில் முதல்முதலாக இணைந்த 50 ஊழியர்களுக்கு 233 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தன்னுடைய பங்குகளைக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ட்ரெவர் மில்டன், "நான் எங்களுடைய நிறுவனத்தை தொடங்கியபோது உலகின் சிறந்த ஊழியர்களை தேடிக்கொண்டிருந்தேன். அது மிகவும் சவாலான காரியம். அப்படி எங்கள் நிறுவனத்தில் இணைந்த முதல் 50 ஊழியர்களிடம் கொடுத்திருந்த வாக்குறுதியான 6 மில்லியன் பங்குகளை இப்போது கொடுத்துள்ளேன். அவர்கள்தான் எங்களுடைய நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம். இந்த வேகத்திலேயே எங்களுடைய வளர்ச்சி இருந்தால் இவற்றுடைய மதிப்பு எதிர்காலத்தில் பில்லியன்களாக மாறும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
