'இந்த வருசமும் அவர் தான் நம்பர்-1...' 'இது மூணாவது தடவ...' - 'அமெரிக்காவோட டாப் பணக்காரங்க லிஸ்ட்ல...' - 7 இந்திய-அமெரிக்கர்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்2020-ஆம் ஆண்டின் அமெரிக்காவில் இருக்கும் 400 பணக்காரர்களின் பட்டியலில் ஏழு இந்திய-அமெரிக்கர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2020-ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் பட்டியலின் 400 பணக்காரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 179 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்தார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பௌண்டேசன் 111 பில்லியன் மதிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 339 வது இடத்தில் உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவை பூர்விகமாக கொண்ட 7 இந்தியர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.
61 வயதான சவுத்ரி 6.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 85-வது இடத்தில் உள்ளார், மேலும் அவர் 2008-இல் இசட்ஸ்கேலரை நிறுவியதும் குறிப்பிடத்தக்கது.
73 வயதான வாத்வானி 400 பணக்காரர்கள் பட்டியலில் 238-வது இடத்தில் உள்ளார் மற்றும் இவரது நிகர மதிப்பு 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
299-வது இடத்தில், 46 வயதான ஷா, 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடையவர். ஷா ஒரு பில்லியனரான ஸ்டீவ் கோனைனுடன் 2002-இல் வணிகத்தைத் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
65 வயதான கோஸ்லா, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 353-வது இடத்தில் உள்ளார்.
359-வது இடத்தில் 63 வயதான ஸ்ரீராம் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் திகழ்கிறார். இந்தியாவில் பிறந்த ஸ்ரீராம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
67 வயதான கங்வால் இந்த பட்டியலில் 359-வது இடத்தில் உள்ளார். அவரது நிகர மதிப்பு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
359-வது இடத்தில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் பூஸ்ரி என்பவர் உள்ளார்.