BREAKING: ‘முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம்...’ - நினைவு திரும்பாமலே உயிர் பிரிந்தது...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த கோமா நிலையிலேயே இருந்து வந்த நிலையில், நினைவு திரும்பாமலேயே புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
மூளையில் ரத்தக் கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி புதுடில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டாா். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது முதல் அவா் கோமாவில் இருந்தார்.
உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டது. அவருக்கு நுரையீரல் தொற்று, சீறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் உண்டானதால் அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் அவர் இன்று உயிரிழந்தார். முன்னதாக, அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

மற்ற செய்திகள்
