'இங்க உயிரிழப்பு கம்மியாக இருப்பதற்கு'... 'இதுகூட ஒரு காரணமா?'... 'ஆய்வு கூறும் புதிய ‘ஆச்சரிய’ தகவல்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக குறைவான உயிரிழப்புகள் பதிவாவது குறித்த ஆய்வில் புதிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், இந்தியா உள்ளிட்ட வளரும் ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக குறைவான உயிரிழப்புகள் பதிவாக நல்ல காற்றோட்டம் மற்றும் குறைவான மூடிய காற்று சீரமைக்கப்பட்ட இடங்கள் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மூடப்பட்ட இடங்களில் காற்றில் உள்ளதால் அது மீண்டும் மீண்டும் வெளிப்படுவதற்கும், மேல் சுவாசக் குழாயில் அதிக வைரஸ் சுமைகளை உருவாக்குவதற்கும் வழிவகுப்பதால் இது நோயின் தீவிரத்தையும் உயிரிழப்பையும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வளரும் நாடுகளில் உள்ள மக்கள் காற்று சீரமைக்கப்பட்ட மூடப்பட்ட இடங்களில் குறைந்த நேரத்தை செலவிடுவதாலேயே பல ஆசிய நாடுகளில் குறைவான உயிரிழப்புகள் பதிவாகி இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ஆய்வு எழுத்தாளரும், புற்றுநோயியல் துறையின் தலைவருமான டாக்டர் ஷியாம் அகர்வால், "கொரோனா பாதிப்புகளின் ஆரம்ப எழுச்சி ஐரோப்பிய நாடுகளிலிருந்து பதிவாகியுள்ளது. அங்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய குளிர்கால மாதங்களில் மக்கள் அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கக்கூடும். மேலும் இந்தியாவில் உள்ள நெரிசலான வீடுகள் கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கிறது. இந்தியாவில் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பலர் நேரத்தை செலவிடவில்லை என்றாலும், இங்கு சிறிய வீடுகளில் அருகிலேயே வசிக்கும் பலருடைய குடும்பங்களுக்குள் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
