'திருவண்ணாமலை' மாவட்டத்தில்... பல கோடி ரூபாய்க்கு 'நலத்திட்ட' பணிகள்... தொடங்கி வைத்த 'தமிழக' 'முதல்வர்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மாவட்டந்தோறும் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை மொத்தம் 19 மாவட்டங்களுக்கு ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை 20 - ஆவது மாவட்டமாக திருவண்ணாமலைக்கு சென்றார்.
அங்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக திருவண்ணாமலையில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, 16 துறைகள் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார்.
இறுதியாக, கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பத்திரிகையர்கள் சந்திப்பில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'மக்கள் அரசை தேடிச் சென்ற நிலை மாறி இன்று மக்களை அரசு தேடிச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து உதவி வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 35,000 மானுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் ஏக்கருக்கு மேலாக வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல் விளைச்சல் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை விளைச்சல் ஏற்பட்டுள்ளது' என்றார்.