'இந்த தடுப்பூசி பாதுகாப்பா இருக்கு'... 'தொடர்ந்து உயரும் பாதிப்புக்கு நடுவே'... 'நம்பிக்கை தரும் தகவலால் ஆய்வை தீவிரப்படுத்திய இந்தியா!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு ஆள் அதிகரித்து வருவதால் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான நாடுகளை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இதிலிருந்து மீள தடுப்பூசி ஒன்றே வழியாக கருதப்படும் சூழலில், பல நாடுகளிலும் தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை தயாரித்துவிட்டதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பூசி அவசர கதியில் உருவாக்கப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த நிலையில், இந்த தடுப்பூசி சிறந்த பாதுகாப்பு அளிப்பதாக பிரபல மருத்துவ இதழான லான்செட் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தடுப்பூசி பக்கவிளைவுகளற்றது என லான்செட் மருத்துவ இதழ் கூறியுள்ளதை அடுத்து இந்த மருந்து தொடர்பான விவரங்களை அந்நாடு இந்தியாவிற்கு வழங்கியுள்ளதால், அதைப் பயன்படுத்துவது குறித்து இந்தியாவின் மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆய்வு நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவில் இந்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.