'குறைவான வருமானம்’... ‘செலவு அதிகம்’... '3-வது முறையாக’... ‘ஆள்குறைப்பில் பிரபல நிறுவனம்’!
முகப்பு > செய்திகள் > வணிகம்By Sangeetha | Oct 16, 2019 08:30 PM
வர்த்தக இழப்பு காரணமாக, மூன்றாவது முறையாக, ஆள்களை குறைக்கும் பணியில் உபர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
உபர் நிறுவனம், வாடகை வாகனச் சேவையை மட்டும் வழங்காமல், 'உபர் ஈட்ஸ்' என்ற பெயரில், ஆன்லைன் உணவு டெலிவரி சேவையையும் செய்துவருகிறது. இந்நிலையில் உலகளவில் ஏற்பட்ட வர்த்தக இழப்பு காரணமாக, உபர் நிறுவனம் 3-வது முறையாக, அதன் ஊழியர்களில், சிலபேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உபர் இந்தியாவில் வேலை செய்து வரும் சுமார் 1200 பேரில், 10%-15% பேர் வரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிகிறது.
ஊழியர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், உலக அளவில் அந்த நிறுவனத்திலிருந்து, 350 பேர் வரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில், உபரின் வர்த்தகக் கொள்கையைத் தீர்மானிக்கும் குழுவின் எண்ணிக்கையும், தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. உபர் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில், 2% மட்டுமே இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. இதுவும் ஆள்குறைப்பு நடவடிக்கைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. cost cutting என்ற பெயரில் பல நிறுவனங்கள் இதுபோல் செயல்பட்டு வருகின்றன.