'ஜியோவின் அடுத்த அதிரடி'... 'இனிமேல் ஸ்பீட் மட்டும் எப்படி இருக்கும்னு பாருங்க'... எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் 5ஜி கட்டமைப்புப் பணிக்காக உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் உடன் ஜியோ கைகோர்க்க உள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மெய்நிகராக்கப்பட்ட ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் மூலம் 5 ஜி சேவையை தொடங்க ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. குவால்காம் 5ஜி RAN இயங்குதளங்களைப் பயன்படுத்தும் ரிலையன்ஸ் ஜியோ 5GNR மென்பொருளில் 1 Gbps மைல்கல்லை எட்டியுள்ளதாக ஜியோ மற்றும் குவால்காம் ஒன்றாக அறிவித்துள்ளன.
குவால்காம் 5ஜி உச்சிமாநாட்டின்போது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவர் மேத்யூ ஓம்மன் கூறுகையில், ‘’புதிய தலைமுறைக்கான கிளவுட் நேட்டிவ் 5ஜி RAN தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் குவால்காம் டெக்னாலஜிஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது உண்மையிலேயே திறந்த மற்றும் மென்பொருள் ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. ஜியோ இயங்குதளங்கள் மற்றும் ஸ்கேல் இணைந்து குவால்காம் டெக்னாலஜிஸுடன் பாதுகாப்பான RAN தீர்வுகளின் மேம்பாடு உள்ளூர் உற்பத்திக்கான சிறந்த கலவையை வழங்குகிறது” என்று கூறினார்.
ஜியோ அதன் சந்தாதாரர்களுக்கு குறைந்த செலவில் மற்றும் அதிகமான 4ஜி நெட்வொர்க் கவரேஜ் மற்றும் இந்திய வாடிக்கையாளர்களுக்கான மேம்பட்ட 5ஜி உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வெளியிடுவதற்கான பயணத்தில் அவர்களுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் ஆவலாக உள்ளோம் என குவால்காம் இந்தியாவின் தலைவருமான ராஜன் வாகாடியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் டேட்டா சேவை இன்னும் மேம்படும், அதோடு அதன் வேகமும் அதிகரிக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.