'இனிமேல் ஜாலியா படம் பாக்கலாம்'... 'வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் அதிரடி ஆஃபர்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஃபைபர் நெட்வொர்க்கில் கோலோச்சி வரும் ஜியோ ஃபைபர் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜீ5 ப்ரீமியத்தை இலவசமாக அளித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அமேசான் ப்ரைம் ஓராண்டிற்கான பயன்பாட்டை ஜியோ ஃபைர் தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்த நிலையில், தற்போது இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

ஜீ5 ப்ரீமியமை பொறுத்தளவில் 4,500க்கும் அதிகமான படங்கள், 120க்கும் அதிகமான ஜீ5 ஒரிஜினல் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் உள்ளன. எனவே இது வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஆஃபராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜியோ ஃபைபர், ஜீ5, ஜியோ டிவி உள்ளிட்டவை விரைவில் செட் டாப் பாக்ஸாக அளிக்கப்படவுள்ளது.
லாக்டவுனில் ஜீ5 ப்ரீமியத்தின் சந்தாதாரர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர் என்றும், இதனால் ஜியோவுடன் இணைந்து இந்த சிறப்புச் சலுகைகளை அளிப்பதாகவும் ஜீ5 இந்தியா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு துணைத் தலைவர் மன்ப்ரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஏர்டெல்லுடனும் ஜீ5 தனது வர்த்தகத்தை விரிவாக்கியுள்ளது. ஏர்டெல் சந்தாதாரர்கள் ரூ. 149 மற்றும் அதற்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்தி ஜீ5 ப்ரீமியத்தை இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம்.

மற்ற செய்திகள்
