'அடித்து நாக்அவுட் செஞ்ச அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை'... புதிய சாதனை படைத்த ஐபோன் 11!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Jeno | Oct 21, 2020 04:37 PM

அமேசான் க்ரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Amazon\'s Great Indian Festival sale has been a huge success this year

ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் வருடந்தோறும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற மாபெரும் விற்பனையை நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் தொடக்க நாளில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பெரிய சாதனங்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அமேசான் இந்தியா துணைத் தலைவர் மணீஷ் திவாரி, ''அமேசான் அதிக எண்ணிக்கையிலான புதிய வாடிக்கையாளர்களை Amazon.in -ல் முதன்முறையாகப் பெற்றுள்ளது.

இந்த புதிய வாடிக்கையாளர்களில் 91 சதவிகிதம் சிறிய நகரங்களிலிருந்து வந்தவர்கள். 98.4 சதவிகித பின்கோடு வாடிக்கையாளர்கள் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் முதல் 48 மணி நேரத்தில் பொருட்களை வங்கியுள்ளார்கள். இந்த ஆண்டின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது அதிகம் விற்பனையான பிரிவுகள் ஸ்மார்ட்போன்கள், பெரிய உபகரணங்கள் மற்றும் ஒன்பிளஸ், சாம்சங், ஆப்பிள் மற்றும் சியோமி போன்ற பிராண்டுகளின் நுகர்வோர். மேலும், ஒன்பிளஸ் 8 டி, எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ், ஒன்பிளஸ் நோர்ட் (கிரே ஆஷ் பதிப்பு) போன்ற 1,100 புதிய தயாரிப்புகளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் இந்த ஆண்டு கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் தொடக்க நாளில் விற்கப்பட்ட ஐபோன் 11 மாடல்களின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டு முழு பண்டிகை விற்பனையிலும் விற்கப்பட்ட மொத்த ஐபோன்களை விட அதிகமாக விற்று சாதனை படைத்துள்ளது எனவும் கூறியுள்ளார். அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் ஐபோன் 11, ரெட்மி நோட் சீரிஸ், ரெட்மி 9 ஏ, ஒன்பிளஸ் 8 டி, ஒன்ப்ளஸ் நோர்ட் மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 31 பிரைம் எடிஷன் ஆகியவை ஆகும்.

இதுதவிர சாதனங்களில்,  குளிர்சாதனப் பெட்டிகள், ஏர் கண்டிஷனர்கள், மைக்ரோவேவ் ஓவென் மற்றும் டிஷ் வாஷர் ஆகியவை அதிகம் விற்பனையானது. எலக்ட்ரானிக்சில், மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், டேப்லெட்டுகள், கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் அதிக தேவைகளைக் கண்டதாக அமேசான் தெரிவித்துள்ளது. மேலும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது மொத்தம் 1.1 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையாளர்கள் ஆர்டர்களைப் பெற்றுள்ளனர்.

அவர்களில் 66 சதவீதம் பேர் அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடைசியாக, அமேசான் ஈ.எம்.ஐ வாங்கும் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே மேசான் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை ஈ.எம்.ஐ.யில் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ ஸ்மார்ட்போன்களில் மூன்றில் ஒரு பங்கு ஈ.எம்.ஐ.யில் வாங்கப்பட்டதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Amazon's Great Indian Festival sale has been a huge success this year | Business News.