"என் பெயரைக் கேட்டாலே எல்லோரும் தெறிச்சு ஓடுறாங்க..ஆனா எனக்கு பழகிடுச்சு" - வைரலாகும் இந்தியரின் வித்தியாசமான பெயர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக பெயரில் என்ன இருக்கு, நம் செய்யும் செயல்களில் தான் இருக்கு என அட்வைஸ்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். ஆனால் பெயர்களை வைத்து கிண்டலடிக்கும் பழக்கம் இன்னும் பலரிடத்தில் இருக்கிறது. இம்மாதிரிப் பிரச்சினையைத் தான் எதிர்கொண்டுவருகிறார் இந்தியாவைச் சேர்ந்த கோவிட் கபூர்.
கொரோனா காலத்திற்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாக வெளிநாடுகளுக்குச் செல்லத் துவங்கியுள்ளார் கோவிட். இவரது பெயரைக் கேட்டதும் பலரும் ஆச்சர்யப்பட்டாலும் சிலர் பயப்படத்தான் செய்கிறார்கள் என்கிறார் கோவிட். ட்வீட்டரில் தற்போது பிரபலமாகியுள்ள கோவிட் தனது பக்கத்தில் "மை நேம் ஐஸ் கோவிட் ஐயாம் நாட் எ வைரஸ் (My name is Kovid and I am not a virus)" எனக் குறிப்பிட்டுள்ளார்.
40000 லைக்ஸ்
கடந்த வெள்ளிக்கிழமையன்று வருங்கால வெளிநாட்டுப் பயணங்கள் ஜாலியாக இருக்கப்போகின்றன (Future foreign trips are going to be fun) எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு 40,000 லைக்குகளும் 4000 பேர் ரீட்வீட்களும் செய்துள்ளனர்.
ஹாலிடிபை என்னும் பயண நிறுவனத்தின் இணை நிறுவனரான கோவிட், தனக்கு வரும் புதிய அழைப்புகள், நேர்காணல்கள் ஆகியவற்றின்போது தன்னுடைய பெயர் எதிர்தரப்பில் இருப்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதைப் பார்க்க முடியும். ஆரம்பத்தில் இது கஷ்டமாக இருந்தாலும் பின்னர் அதுவே ஜாலியாக மாறிவிட்டது என்கிறார் கோவிட்.
T20 போட்டிகளில் இனி புதிய விதிமுறை - பவர்ப்ளே இனி பவர்புல்லா இருக்கும் போலயே?
கிண்டல்
இப்போதெல்லாம் தன்னுடைய பெயரையே தன் நிறுவனத்திற்கு வியாபார உத்தியாக பயன்படுத்துகிறார் கோவிட் . உதாரணமாக Kovid positive since 1990, I am Kovid that wants more travel ஆகிய பதிவுகளை டிவிட்டரில் இவர் வெளியிட்டதற்குப் பின்னர் இவரது வியாபாரமும் கணிசமாக வளர்ந்ததாக கோவிட் குறிப்பிடுகிறார்.
"காபி ஷாப்களில் தன்னுடைய பெயரைச் சொல்லி யாரும் அழைப்பதில்லை. சக வாடிக்கையாளர்கள் அச்சப்படுவார்கள் என காபி ஷாப் ஊழியர்கள் கூறுவார்கள். நானும் சிரித்தபடி என்னுடைய காபியை குடித்துவிட்டு வந்துவிடுவேன்" என்கிறார் கோவிட்.
வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம்.. கிரிமினல் குற்றமா? டெல்லி அரசு பரபரப்பு வாதம்
"கோவிட் என்றால் சமஸ்கிருதத்தில் சுயமாக கற்றுத் தேர்ந்தவர் எனப் பொருள். எனது அம்மா தான் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார். இது அழகான பெயர். யார் என்ன சொன்னாலும் இப்பெயரை மாற்றமாட்டேன்" என உறுதியாகச் சொல்கிறார் கோவிட் கபூர்.