இனி ஹெல்மெட்டை இப்படி போட்டெல்லாம் எஸ்கேப் ஆக முடியாது.. வெளியானது புது ரூல்ஸ்..!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி அரசு ஹெல்மெட் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, சாலைகளில் ஹெல்மெட் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹெல்மெட் அணியும் நபர்கள் அதை முறையாக அணிகிறார்களா என்பதை பொறுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் ஹெல்மெட்டை முறையாக அணியவில்லை என்றாலும் அந்த வாகன ஓட்டிகளுக்கு இனி ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
1. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.2000 அபராதம்.
2. வாகன ஓட்டி ஹெல்மெட்டை அணிந்து அதற்கான லாக் முடிச்சை (Buckle) அணியவில்லை என்றால் அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
3. BSI (Bureau of Indian Standards) தரச்சான்று இல்லாத ஹெல்மெட் அணிந்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
4. டிராபிக் சிக்னலில் விதிகளை பின்பற்றாமல் செல்லும் நபர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.
விபத்து ஏற்படும் பட்சத்தில் ஹெல்மெட்டை ஒழுங்காக அணியவில்லை என்றால், அது பறந்து சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அதனால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி ஹெல்மெட்டை முறையாக அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் அபராதத்தில் இருந்து தப்பிக்க, லாக் முடிச்சை அணியாமல் ஹெல்மெட் அணிந்து செல்வதை கவனித்து போலீசார் அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த புது கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8