www.garudabazaar.com
iTechUS

King of Kotha : அடிபொலி.!! பண்டிகையில் ரிலீஸ் ஆகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இவ்வாண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசளிக்க உள்ளது.

Zee Studios South King of Kotha in Onam 2023 Dulquer Salmaan

Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்.. வெளிநாட்டிற்கு செல்லும் ஷங்கர் & கமல்ஹாசன்? BREAKING அப்டேட்

முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கூட்டணியின் முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் அவரது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட துல்கரின் கெட்டப்பைப் போலவே, இப்படத்தில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கரின் மிரட்டலான தோற்றமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அபிலாஷ். என்.சந்திரன் எழுத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம் பான்-இந்திய நட்சத்திரமான துல்கரின் அடுத்த பிரமாண்ட பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Zee Studios South King of Kotha in Onam 2023 Dulquer Salmaan

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஷ்யாம் ஷஷிதரன் செய்கிறார்,  ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்,

ஆடை வடிவமைப்பு: பிரவீன் வர்மா,

நிழற்படம்: ஷுஹைப் எஸ்.பி.கே,

ப்ரொடக்ஷன் கன்ட்ரோலர்: தீபக் பரமேஷ்வர்.

மக்கள் தொடர்பு - சதீஷ் குமார், சிவா (AIM)

Also Read | K. VISWANATH : கே.விஸ்வநாத் மறைவு.. இளையராஜா இரங்கல் வீடியோ.. “மறக்க முடியாத காம்போ” ரசிகர்கள் உருக்கம்..

Zee Studios South King of Kotha in Onam 2023 Dulquer Salmaan

People looking for online information on Dulquer Salmaan, King of Kotha, Onam 2023, Zee Studios South will find this news story useful.