www.garudabazaar.com

சீதா மகாலட்சுமியை அமெரிக்காவில் சந்தித்த ராம்! மிருணாள் தாகூர் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

Sita Ramam Dulquer Salmaan Met Mrunal Thakur in USA

Also Read | BREAKING: சிவகார்த்திகேயன் நடித்த 'PRINCE'.. பிரபல OTT-யில் ரிலீஸ் எப்போ?

தெலுங்கின் முன்னணி இயக்குனரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கியமான  வேடத்தில் நடித்தார்.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்க,  ஸ்வப்னா சினிமா நிறுவனம் இந்த படத்தை  தயாரித்தது. 

Sita Ramam Dulquer Salmaan Met Mrunal Thakur in USA

1960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த 'சீதா ராமம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு,  தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

Sita Ramam Dulquer Salmaan Met Mrunal Thakur in USA

இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் & மிருணாள் தாகூர் இருவரும் அமெரிக்காவில் சந்தித்துள்ள புகைப்படத்தை 'Reunited' என தலைப்பிட்டு நடிகை மிருணாள் தாகூர் தனது முகநூல் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.

Sita Ramam Dulquer Salmaan Met Mrunal Thakur in USA

சீதா ராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மான் ராம் எனும் ராணுவ வீரனாகவும், மிருணாள் தாகூர் சீதா மகாலட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | விஷ்ணு விஷால் & 'பூங்குழலி' ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் புதிய படம்.. வெளியான FIRST LOOK POSTER!

தொடர்புடைய இணைப்புகள்

Sita Ramam Dulquer Salmaan Met Mrunal Thakur in USA

People looking for online information on Dulquer salmaan, Mrunal Thakur, Sita Ramam will find this news story useful.