Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடித்த சீதா ராமம்.. மூன்று நாளில் இம்புட்டு வசூலா! செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான் நடித்த 'சீதா ராமம்' படத்தின் திரையரங்க வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Dulquer Salmaan Sita Ramam Movie 3 Days Worldwide Box Office Collection

Also Read | மனைவி நஸ்ரியாவோடு பிறந்தநாள் கொண்டாடிய பஹத் பாசில்! நஸ்ரியா சொன்ன வாழ்த்து தான் ஹைலைட்டே!

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கியமான  வேடத்தில் நடித்துள்ளார்.

Dulquer Salmaan Sita Ramam Movie 3 Days Worldwide Box Office Collection

1960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த 'சீதா ராமம்' திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்க,  ஸ்வப்னா சினிமா நிறுவனம் இந்த படத்தை  தயாரித்திருக்கிறது. 

இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் இந்த திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.‌ இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவித்துள்ளது.

Dulquer Salmaan Sita Ramam Movie 3 Days Worldwide Box Office Collection

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுபாஸ்கரனின்  லைக்கா புரொடக்ஷன்ஸ்   நிறுவனம் கைப்பற்றி தமிழகத்தில் ரிலீஸ் செய்துள்ளது.

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ரஷ்மிகா மந்தானா, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Dulquer Salmaan Sita Ramam Movie 3 Days Worldwide Box Office Collection

பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார் கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

Also Read | Monochrome போட்டோஷூட்டில் மாஸ் காட்டிய ஸ்ருதிஹாசன்.. இதுக்கு தானா? வெளிவந்த செம போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer Salmaan Sita Ramam Movie 3 Days Worldwide Box Office Collection

People looking for online information on Dulquer salmaan, Sita Ramam Movie, Sita Ramam Movie Box office collection will find this news story useful.