www.garudabazaar.com
iTechUS

பிரபல தென்னிந்திய மெகா ஸ்டாருடன் சினேகா & பிரசன்னா.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினேகா & பிரசன்னா துபாயில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Sneha Prasanna with Mammootty for Christopher Movie Dubai Promotion

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அடடே.. தளபதி 67 காஷ்மீர் ஷூட்டிங்கில் 'விக்ரம்' பட ஏஜெண்ட் டீனா.. வேற லெவல் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் சினேகா. கமல், அஜித், விஜய், தனுஷ், சிலம்பரசன்  என  முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாது ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

Sneha Prasanna with Mammootty for Christopher Movie Dubai Promotion

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னா, சினேகா தம்பதிகளுக்கு  விஹான் என்ற ஆண் குழந்தையும்  ஆத்யந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

Sneha Prasanna with Mammootty for Christopher Movie Dubai Promotion

Images are subject to © copyright to their respective owners.

கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டாஸ் படத்தில் சினேகா நடித்திருந்தார். தற்போது சினேகா, மம்மூட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரசன்னாவும் தற்போது துப்பறிவாளன் -2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sneha Prasanna with Mammootty for Christopher Movie Dubai Promotion

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சினேகா & பிரசன்னா தற்போது துபாய் சென்றுள்ளனர். மம்மூட்டி நடிப்பில் உருவாகி உள்ள கிறிஸ்டோபர் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக படக்குழுவினர் பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

Sneha Prasanna with Mammootty for Christopher Movie Dubai Promotion

Images are subject to © copyright to their respective owners.

இதன் ஒரு பகுதியாக துபாயில் நடக்கும் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள சினேகா & பிரசன்னா சென்றுள்ளனர். அப்போது மம்மூட்டி, ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோருடன் சினேகா பிரசன்னா தம்பதியர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படங்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

Also Read | "நடிக்க வந்து 10 வருசம் ஆகிடுச்சு".. தனது ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கௌதம் கார்த்திக்!

தொடர்புடைய இணைப்புகள்

Sneha Prasanna with Mammootty for Christopher Movie Dubai Promotion

People looking for online information on Christopher Movie, Christopher Movie Dubai Promotion, Mammootty, Prasanna, Sneha, Sneha prasanna will find this news story useful.