LIGER D Logo Top
www.garudabazaar.com

BOX OFFICE: 100 கோடி வசூலை நெருங்கும் துல்கர் சல்மான் நடித்த 'சீதா ராமம்'.. மொத்த வசூல் நிலவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான் நடித்த 'சீதா ராமம்' படத்தின் தற்போதைய திரையரங்க வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Sita Ramam Box Office 75 Cr

Also Read | "பொன்னியின் செல்வன்" படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! மாஸ்

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கியமான  வேடத்தில் நடித்துள்ளார்.

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Mandanna Sita Ramam Box Office Collection

1960களில் போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த 'சீதா ராமம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு,  தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்க,  ஸ்வப்னா சினிமா நிறுவனம் இந்த படத்தை  தயாரித்திருக்கிறது. 

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Sita Ramam Box Office 75 Cr

இந்நிலையில் இந்த திரைப்படம் 5 வாரங்களில் 75 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.‌ இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவித்துள்ளது. விரைவில் மீண்டு இந்த படம் 100 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Sita Ramam Box Office 75 Cr

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுபாஸ்கரனின்  லைக்கா புரொடக்ஷன்ஸ்   நிறுவனம் கைப்பற்றி தமிழகத்தில் ரிலீஸ் செய்துள்ளது.

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ரஷ்மிகா மந்தானா, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Sita Ramam Box Office 75 Cr

பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார் கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

Also Read | பிரேமம் புகழ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் 'GOLD'.. தமிழ் போஸ்டர் செமயா இருக்கே!

Dulquer Salmaan Mrunal Thakur Rashmika Sita Ramam Box Office 75 Cr

People looking for online information on Dulquer salmaan, Sita Ramam, Sita Ramam Movie Box office Collections will find this news story useful.