www.garudabazaar.com
iTechUS

"ஓகே கண்மணி படத்துல அந்த சீன்.. Cute".. துல்கர் சல்மானின் ஃபேவரைட் இதுதானாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர் ஓகே கண்மணி படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி எது? என கேட்டிருந்தார். இதற்கு துல்கர் சல்மானும் ரிப்ளை செய்திருக்கிறார்.

Dulquer salmaan about favourite scene in OK Kanmani movie

Also Read | "சீதாராமம் பார்ட் - 2 வருமா?".. ரசிகரின் கேள்விக்கு துல்கர் சல்மான் கொடுத்த கலகல பதில்..!

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் மம்முட்டி. இவருடைய மகனும் நடிகருமான துல்கர் சல்மான் கடந்த 2012 ஆம் ஆண்டு 'செகண்ட் ஷோ' படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வாயை மூடி பேசவும், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் துல்கரின் கதாப்பாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

Images are subject to © copyright to their respective owners.

அண்மையில் இவர் நடித்து வெளிவந்த சீதா ராமம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கியமான  வேடத்தில் நடித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது அவரது ரசிகர் ஒருவர்,"ஓகே கண்மணி படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி எது?" என கேள்வி எழுப்பி இருந்தார். அவருக்கு பதில் அளித்திருக்கும் துல்கர், அந்த படத்தில் சர்ச்சில் நிகழும் சந்திப்பு காட்சி மிகவும் கியூட்டான ஒன்று என குறிப்பிட்டிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி திரைப்படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் ஆகியோர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இசையும், பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் படத்தின் பலமாக அமைய, ரசிகர்களிடையே இந்த படம் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது.

Also Read | KGF யாஷ் கொடுத்த விருந்து.. நெகிழ்ந்துபோன துல்கர் சல்மானின் வைரல் போஸ்ட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Dulquer salmaan about favourite scene in OK Kanmani movie

People looking for online information on Dulquer salmaan, OK Kanmani will find this news story useful.