www.garudabazaar.com
iTechUS

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்.. வெளிநாட்டிற்கு செல்லும் ஷங்கர் & கமல்ஹாசன்? BREAKING அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் வெளிநாடு படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Indian2 Next schedule shooting in South Africa for 15 days

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அசீம் தான் உண்மையான அண்ணா".. பிக்பாஸ் தனலட்சுமி - அசீமின் லேட்டஸ்ட் ரீல்ஸ்..!

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர்.

Indian2 Next schedule shooting in South Africa for 15 days

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள்.

முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Indian2 Next schedule shooting in South Africa for 15 days

Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  இந்தியன் 2 படத்தின் தற்போதைய திருப்பதி படப்பிடிப்பு நாளையுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indian2 Next schedule shooting in South Africa for 15 days

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் கமல்ஹாசன் & இயக்குனர் ஷங்கர் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி சென்னை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தென் ஆப்ரிக்கா நாட்டில் 15 நாட்கள் நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்வதற்கான  விசா நடைமுறைகள் முடிந்ததும் படப்பிடிப்பு தேதிகள் முடிவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | பிரபல தென்னிந்திய மெகா ஸ்டாருடன் சினேகா & பிரசன்னா.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோஸ்..!

தொடர்புடைய இணைப்புகள்

Indian2 Next schedule shooting in South Africa for 15 days

People looking for online information on Indian 2, Indian 2 Movie update, Kamal Haasan, Shankar will find this news story useful.