www.garudabazaar.com
iTechUS

தளபதி 67-ன் அடுத்த அப்டேட்.. விமான பயணத்தில் படக்குழு.. நடிகர் விஜய் எடுத்த வீடியோ😍..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 படம் உருவாகி வருகிறது. விஜய் நடித்திருந்த மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது தளபதி 67 படத்தையும் இயக்கி வருகிறார்.

T67 Movie Crew flew to Kashmir for shooting video goes viral

Also Read | "என் மாஸ்டருக்கு சல்யூட்".. பழம்பெரும் நடிகர் விஸ்வநாத் மறைவு.. கமல்ஹாசன் உருக்கம்..!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கியது.

இசை அமைப்பாளர் அனிருத், தளபதி 67 படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

T67 Movie Crew flew to Kashmir for shooting video goes viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.

அண்மையில் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சாண்டி உள்ளிட்டோர் தளபதி 67 படத்தில் நடித்து வருவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

T67 Movie Crew flew to Kashmir for shooting video goes viral

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. படத்தின் இணைத்தயாரிப்பாளர் ஜெகதீஷ் பகிர்ந்துள்ள பதிவில் காஷ்மீரில் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு வீடியோவையும் அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் படக்குழு முழுவதும் ஒரே விமானத்தில் பயணிக்கின்றனர். அப்போது, உள்ளிருந்த ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருக்க, அதை வாங்கி விஜய் வீடியோ எடுக்க துவங்குகிறார்.

T67 Movie Crew flew to Kashmir for shooting video goes viral

Images are subject to © copyright to their respective owners.

அப்போது தளபதி விஜய் வீடியோ எடுப்பதை அறிந்து அனைவரும் உற்சாகமடைகின்றனர். தொடர்ந்து நடிகை திரிஷாவின் அருகே அமரும் விஜய் அங்கிருந்த குழந்தைகளுடன் சிரித்தபடியே பேசுகிறார். இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read | "ஒரு லெஜெண்டை இழந்துவிட்டோம்".. பழம்பெரும் நடிகர் விஸ்வநாத் மறைவு.. நடிகை குஷ்பு இரங்கல்..!

தொடர்புடைய இணைப்புகள்

T67 Movie Crew flew to Kashmir for shooting video goes viral

People looking for online information on Lokesh Kanagaraj, T67 Movie Crew, Thalapathy 67, Trisha Krishnan, Vijay will find this news story useful.