Fakir Other Banner USA

‘இத யாரும் நம்பமாட்டீங்க.. தங்கச்சி பாப்பா வரபோகுது...’ - கேஜிஎஃப் ஸ்டார் யாஷின் மகள் ஹாப்பி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎஃப் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் வித்தியாசமான முறையில் தனது இரண்டாவது குழந்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

KGF star Yash and wife Radhika Pandit announces their second pregnancy

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் கோலார் தங்க சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என அழைக்கப்படும் யாஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு ராதிகா பண்டித் என்ற நடிகையை திருமணம் செய்த்துக்கொண்டார். கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில் தனது மனைவி முதல் குழந்தைக்கு தாயாகியதாக யாஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். சமீபத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை வீடியோ மூலம் வெளியிட்ட யாஷ், அவரது பெயர் ‘ஐரா’ என்பதை சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

தற்போது யாஷின் மனைவி ராதிகா பண்டிட் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இதனை யாஷின் மகள் ஐரா ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ‘நான் கேள்விபட்டதை சொன்னா நீங்க யாரும் நம்ப மாட்டீங்க..எங்க டாடி ரொம்ப ஸ்பீடா இருக்காருன்னு சொல்றாங்க, ஆனா இதுல? ஒரு நிமிஷம் இது ரொம்ப சீக்கிரமா இருக்கா? இல்ல தாமதாமான அறிவிப்பா? ஆனா நீங்க எல்லாரும் சந்தோஷப்படுவீங்க. நானும் தான். எங்க அப்பா அம்மா இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்காங்க.. அப்படின்னா என்னோட டாய்ஸ் எல்லாம் பங்குபோட ஆள் வரபோகுது? இருக்கட்டும் - ஐரா யாஷ்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கேஜிஎஃப்’ சேப்டர்-1 படத்தை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதற்கான படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகின்றன.