பிக்பாஸ் சீசன் 3 ஒளிபரப்பு தொடங்கி பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. மற்ற சீசன்களை போல அல்லாமல் இது தொடக்கத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய எபிசோட் ஒன்றில் அபிராமி, கவினை பிடித்திருப்பதாக சொல்ல, இருவரும் காதல் கொள்வார்களா என்ற எண்ணம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்தது பின்னாளைய எபிசோட்களில் தான் தெரிய வரும்.
இந்நிலையில் பிக்பாஸின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் மோகன் வைத்தியா, ஒன்னுமே கிடைக்கல என் வாழ்க்கையில, எனக்கு சொல்லி அழக்கூட யாரும் இல்லை, அதுனால தான் இதுல வரணும்னு ஆசப்பட்டேன் என்று சொல்லி அழுகிறார். அவரை அனைவரும் ஆறுதல் சொல்லி தேற்றுகின்றனர்.
குலுங்கி அழும் மோகன் வைத்தியா, என்ன ஆச்சு ? - வெளியான பிக்பாஸின் புதிய புரோமோ வீடியோ