பிக்பாஸ் வீட்டுக்குள் மீரா மிதுன் என்ட்ரி ஆன உடன் சக போட்டியாளர்கள் ஆட்டம்பாட்டத்துடன் வரவேற்க சாக்ஷியும் அபிராமியும் அவரை எரிப்பது போன்று முறைத்தனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் 16வதாக ஒரு போட்டியாளர் வருவது போன்று நேற்று ப்ரமோ வெளியானது. இதனால் யார் அந்த போட்டியாளர் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தனர். அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியானார் மீரா மிதுன்.
மீராவை பார்த்ததுமே சக போட்டியாளர்கள் அவரை வரவேற்றனர். ஆனால் சாக்ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் அப்படி ஒரு முறை முறைத்தனர்.
மீரா என்ட்ரியானதும் அனைவரும் அவரை விசாரித்து பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் சாக்ஷியும் அபிராமியும் மூஞ்சில் அடித்தாற்போல் அவரைக் கண்டதும் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் வீட்டுக்குள் சென்றுவிட்டனர்.
அப்போது அபிராமி தனக்கு மீரா மிதுனை கொஞ்சமும் பிடிக்கவில்லை என பகிரங்கமாகவே கூறினார். சாக்ஷியும் அதுபோலவே மீரா மிதுன் குறித்து வெறுப்பை உமிழ்ந்தார்.
மீரா மிதுன் போலியாக நடிக்கிறார் அப்படி இப்படி என அவர் குறித்து அபிராமியும் சாக்ஷியும் புரணி பேசினர். சாக்ஷியை கூட ஒரு பங்குக்கு சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்த அபிராமி மீராவை பார்க்கும் பார்வையை அவ்வளவு திமிராக இருந்தது
இதைத்தொடர்ந்து ஷெரின், சாக்ஷி, அபிராமி ஆகியோர் ஒரு குரூப்பாக சேர்ந்து மீரா குறித்து தரக்குறைவாக பேசினர். மேலும் மீரா படுக்க பெண்கள் ரூமில் இடமில்லை என்றும் ஆண்கள் ரூமில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளட்டும் என்றும் கூறினர்
இதைத்தொடர்ந்து சேரனிடம் சென்று சிங்கிள் பெட்டை தருமாறு கேட்கும் மீராவுக்கு, தனது பெட்டை விட்டு தருவதாக கூறினார் சேரன். பின்னர் மீராவுக்கு, ஹவுஸ் மெட்ஸை திருப்திபடுத்தி ஏற்றுக்கொள்ள வைக்குமாறு டாஸ்க் கொடுக்கிறார் பிக்பாஸ்.
அப்போதும் அபிராமியும் சாக்ஷியும் மீராவை ஒரு வழியாக்கி விடுகின்றனர். மொத்தத்தில் மீரா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது சாக்ஷிக்கும் அபிராமிக்கும் பிடிக்கவில்லை என்பது முதல் நாளிலேயே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
பின்னர் கேமராவின் முன் சென்று நின்ற சாக்ஷியும் அபிராமியும் எங்களுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. எங்களுக்கு அவளை பிடிக்காது, எங்களுக்கு பர்சனல் காரணங்கள் உள்ளது, அதனால் அப்படி ரியாக்ட் செய்துவிட்டோம் என கூலாக கூறிவிட்டனர். போக போக இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ என்ற பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டது பிக்பாஸை..
#பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளர் மீரா மிதுன்! #MeeraMithun #BiggBossTamil #BiggBossTamil3 #BBTamilContestants #VijayTelevision pic.twitter.com/85iKHno9Gv
— Vijay Television (@vijaytelevision) June 25, 2019