புதுசா பைக் வேணுமா ? - ரொம்ப ஈஸி - இந்த ஷார்ட் ஃபிலிம் பாருங்க ! - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ராம் மகேந்திரா. இவர் இயக்கிய 'மனம்' என்ற குறும்படம் சமீபத்தில் Behindwoods யூடியூப் சேனலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Watch Manam short film in Behindwoods and win a Dio scooty | மனம் குறும்படம் பார்த்து ஹோண்டா டியோ வெல்லும் வாய்ப்பு

இந்த குறும்படத்துக்கு ரசிகர்கள், பிரபலங்கள் ஒரு சேர பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ராம் மகேந்திரா தற்போது ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த படத்தை மாயன் சினிமாஸ், மானசரோவர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்ததும் துவங்கவிருக்கிறது. இந்த படத்துக்கு விஜய் உலகநாத்  ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் மனம் குறும்படம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ''ரொம்ப நாளா சொந்தமா ஒரு வண்டி வாங்கணும்கிறது உங்க கனவா... அப்டீன்னா மனம் படம் பாருங்க. ஒரு புத்தம் பது ஹோன்டா டியோ வெல்லுங்கள். 

மனம் படத்தை முழுவதும் பாருங்க. Description-ல் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உங்க பதிலை, 9361707790 என்ற  Whats App எண்ணுக்கு அனுப்புங்கள்.  பதில் அனுப்பியவர்களில் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஒருவருக்கு புத்தம் புதிய ஹோன்டா டியோ பரிசாக வழங்கப்படும். இந்த பரிசு, மனம் படம் ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டியவுடன் வழங்கப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுசா பைக் வேணுமா ? - ரொம்ப ஈஸி - இந்த ஷார்ட் ஃபிலிம் பாருங்க ! - விவரம் இதோ வீடியோ

Watch Manam short film in Behindwoods and win a Dio scooty | மனம் குறும்படம் பார்த்து ஹோண்டா டியோ வெல்லும் வாய்ப்பு

People looking for online information on Behindwoods, Honda Dio, Manam will find this news story useful.