பிரபல ஹீரோ படம் உட்பட நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 3 படங்கள் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளித்தாலும், திரையரங்குகள், வணிக வளாககங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கவில்லை.

இதன் காரணமாக, இந்த வருடம் வெளியாக திட்டமிட்டிருந்த படங்களின் ரீலிஸ் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில படங்கள் நேரடியாக ஓடிடி எனப்படும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாகி வருகின்றன. சூர்யா தயாரிப்பில் ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்திருந்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் கடந்த மே 29 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பென்குயின்' திரைப்படம் வருகிற ஜூன் 19 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எங்கள் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேசன் தயாரித்துள்ள படங்களான 'அண்டாவக் காணோம்', 'வா டீல்', 'மம்மி சேவ் மீ' ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. மேலும் நாங்கள் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் 3 படங்களின் நடிகர்கள் தொழில்நுட்பக்கலைஞர்களின் அறிவிப்பையும் விரைவில் வெளியிடவிருக்கிறோம். எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவு தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில், ரத்ன சிவா இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள 'வா டீல்' திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி அருண் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்பது உறுதி.

Popular producer announces to release 3 films straight in OTT ft JSK, Arun Vijay | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபல தயாரிப்பாளரின் மூன்று ப�

People looking for online information on Arun Vijay, J Sathish Kumar, Va Deal will find this news story useful.