உங்கள் BehindwoodsTv சேனல் தொட்டிருக்கும் புதிய மைல்கல்... மக்களின் விருது... மகிழ்ச்சி செய்தி இதோ..!
முகப்பு > சினிமா செய்திகள்மக்களின் குரலாய், சினிமா துறையின் உற்ற நண்பனாய் இருக்கும் நமது BehindwoodsTv சேனல் இன்று 5 மில்லியன் சந்தாதாரர்களுடன்(5 Million Subscribers) கைகோர்த்து இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

'மக்களை மகிழ்விப்பதே நோக்கம்' என்று 17 வருடங்களுக்கு முன்பு, வெறும் திறமையை மட்டும் நம்பி ஆரம்பிக்கப்பட்ட எங்கள் பணி, இன்று எண்ணி பார்க்க முடியாத உயரங்களை எட்டியுள்ளது. குறிப்பாக எங்களின் எல்லா ஆன்லைன் வீடியோ தளங்கள் மூலம், மாதம் 15 கோடி மக்களின் இதயம் கவர்ந்த ஊடகமாய் விளங்கி வருகிறோம்.
பல எண்ணற்ற Exclusive பேட்டிகள், புதிய படங்களின் டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக், அனைத்து திரைத்துறை சார்ந்த விழா கவரேஜ், குறும்படம் என எங்களது எல்லா முயற்சிகளுக்கும் கைகொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. குறிப்பாக சினிமா துறையினர் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் மனதார நன்றி செலுத்துக்கிறோம். இந்த நேரத்தில் உலகெங்கும் இருக்கும் பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் PRO நண்பர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றி.
மக்களின் கேள்விகள், ஆசைகள், கோரிக்கைகள், சந்தேகங்களின் குரலாய் எண்ணற்ற சாதனைகளோடு என்று உலக அளவில் கோடி கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறது நமது சேனல். நீங்கள் பார்க்கும் ஓவ்வொரு வீடியோக்களின் பின்னால் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் அயராத உழைப்பும், அசராத முயற்சியும் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
இறுதியாக இது வெறும் ஆரம்பமே, இனிமேல் தான் சிறப்பான, தரமான சம்பவங்களை பார்ப்பீர்கள் என்று மகிழ்ச்சியுடன் வாக்களிக்கிறது உங்கள் Behindwoods நிறுவனம். அனைவருக்கும் நன்றி..! உங்கள் விருப்பமான வீடியோக்களை உடனுக்குடன் பார்த்து மகிழ: https://www.youtube.com/user/behindwoodstv/videos