பிரபல நடிகையின் போட்டோவில் மோசமான கமெண்ட்... தந்தை வயது இருந்த நபருக்கு சரியான பதிலடி...!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபலங்களின் புகைப்படங்களில் மோசமாக கமெண்ட் செய்வது இன்று நேற்று நடப்பது இல்லை. ஆனாலும் சில சமயம் பிரபலங்களை அவை மோசமான புண்படுத்துகிறது என்பதற்கு இந்த செய்தி ஒரு சான்று. சமீபத்தில் நடிகை அபர்னா ரவி தனது ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவரது தந்தை வயதில் இருந்த ஒருவர் படு மோசமான பாலியல் சீண்டல் கமெண்டை பதிவு செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை அவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறும் பொழுது "உங்களுக்கும் வளர்ந்த ஒரு மகள் இருக்கிறார். அவரை அன்புடன் டைட்டாக கட்டி பிடித்து புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்கள். அதே போல், நானும் ஒருவரது வீட்டு மகள் என்பதை முதலில் மனதில் வையுங்கள். நான் இந்த பக்கத்தில் எனது வேலைகளை புரமோட் செய்ய வருகிறனே தவிர, உங்களுக்கு 30 வினாடி சந்தோஷத்தை அளிப்பதற்கு அல்ல" என்று வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் அந்த நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த நபருக்கு சரியான பதிலடி கொடுத்தீர்கள் என்று நடிகையை பலரும் பாராட்டி வருகின்றனர்.