"சென்னை வராமலே இருந்திருக்கலாம்" - பாவமாக புலம்பும் விஜய் டிவி பிரபலம்... ஏன் என்ன ஆச்சு..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கால் பாவமாக புலம்பும் VJ மணிமேகலை VJ manimegalai sad on this during corona lockdown

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் இந்த நாட்களை இருவரும் மகிழ்ச்சியாக கழித்து வந்தனர்.

இந்நிலையில் அங்கு நடந்த செயல்களை பகிரும் மணிமேகலைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே  உருவாகியிருக்கிறது. இந்நிலையில் தற்போது  சென்னை திரும்பியிருக்கும் அவர் சமையல் பழகி வருகிறார்.ஏற்கனவே ஒருமுறை அவர் சமைக்க முயன்று குக்கர் வெடித்த சம்பவம் நடந்தது. இந்நிலையில் காய்கறிகள் வாங்கி அதன் முன்பு சோகமாக சமையல்கார அக்காவிடம் ஜூம் கால் மூலம் சமைக்கப்போகிறாராம். "காய்கறி வாங்கியாச்சு. யார் சமைக்கிறது? இப்படின்னு தெரிஞ்சிருந்தா சென்னை வராமலே இருந்திருக்கலாம். இம்முறை குக்கர் வெடிக்காமல் இருந்தால் யூடுயூப் சேனலே ஆரம்பிக்கிறேன்" என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஊரடங்கால் பாவமாக புலம்பும் VJ மணிமேகலை VJ manimegalai sad on this during corona lockdown

People looking for online information on Corona, Lockdown, Manimegalai will find this news story useful.