அடுத்த ப்ராஜக்டை லாக் செய்த கௌதம் மேனன்.! - இந்த Legend-உடன் இணைகிறார்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கௌதம் மேனனின் அடுத்த ப்ராஜக்ட் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

வெப் சீரிஸில் இறங்கும் கௌதம் மேனன் | director gautham menon teams up with ps sreeram for amazon web series

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கௌதம் மேனன். கமல், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களை வைத்து இவர் இயக்கியுள்ளார். இதுமட்டுமின்றி இவர் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் வெப் தொடரை இயக்கினார். அண்மையில் இவர் இயக்கி யூ டியூபில் வெளியிட்ட , 'கார்த்திக் டயல் செய்த என்', ஒரு சான்ஸ் கொடு பாடல் உள்ளிட்டவை ஹிட் அடித்தது. 

இந்நிலையில் கௌதம் மேனனின் அடுத்த ப்ராஜக்ட் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இவர் அடுத்ததாக, அமேசான் நிறுவனத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார். இத்தொடரில் கௌதம் மேனன், இந்தியாவின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளரான பி.சி.ஶ்ரீராமுடன் இணையவுள்ளார். கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிந்த பிறகு, இந்த வெப் தொடருக்கான வேலைகள் ஆரம்பிக்கவுள்ளதாம். 

 

வெப் சீரிஸில் இறங்கும் கௌதம் மேனன் | director gautham menon teams up with ps sreeram for amazon web series

People looking for online information on Amazon, Gautham Menon, PC Sreeram, Web Series will find this news story useful.