www.garudabazaar.com
iTechUS

"எனக்கு இது போதும்".. வீட்டுக்கு வந்த சர்ப்ரைஸ் Gift.. பார்த்துட்டு குஷியான 'வாத்தி' விக்ரமன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நாளையுடன் நிறைவுபெற இருக்கிறது. இதனிடையே இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதுதான் இப்போது சமூக வலை தளங்களில் பேச்சாக இருக்கிறது.

Vikraman received Customized Vathi Tshirt in BiggBoss House

முன்னதாக, Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தார். இப்படி பரபரப்பான சம்பவங்களுக்கு இடையே பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷன் குறித்து வெளியிட்ட அறிவிப்பு போட்டியாளர்களை திகைக்க வைத்திருந்தது.

இதன்மூலம் மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். ஆகவே, தற்போது விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் டைட்டிலை வெல்லப்போவது யார் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், நாளை finale நடைபெற இருப்பதை முன்னிட்டு வீட்டுக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே விக்ரமனுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசும் வந்திருக்கிறது.

அவருக்கு டி-ஷர்ட் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் 'வாத்தி' என எழுதப்பட்டுள்ளது. பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட இந்த டி-ஷர்ட்டை  பார்த்தவுடன் விக்ரமன் மகிழ்ச்சியடைகிறார். தொடர்ந்து அங்கிருக்கும் ஷிவினிடம்,"எனக்கு இது போதும் ஷிவின்" என புன்னகையுடன் தெரிவிக்கிறார். அதனுடன் அவருக்கு கருப்பு நிறத்திலான சட்டை மற்றும் வேஷ்டியும் வந்துள்ளது.

அதனை அணிந்திருக்கும் விக்ரமன் தனக்காக உடை டிசைன் செய்து அனுப்பிய கலைஞருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும், ஒவ்வொரு வாரமும் அனுப்பப்பட்ட அத்தனை உடைகளும் நன்றாக இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இதனிடையே, அந்த டிஷர்ட் ஏன் பிடித்திருக்கிறது? என ஷிவின் கேட்கிறார். அப்போது அவருக்கு பதில் அளிக்கும் விக்ரமன்,"வெளியே இது ட்ரெண்டிங் ஆகிட்டு இருக்காம்" என்கிறார். தொடர்ந்து அதனை பத்திரமாக தனது பெட்டியில் வைத்துக்கொள்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman received Customized Vathi Tshirt in BiggBoss House

People looking for online information on Biggboss6Tamil, Shivin, Vikraman will find this news story useful.