"உங்களுக்கு தலைவணங்குகிறேன்".. உருக்கமாக பேசிய விக்ரமன்.. கடைசில பிக்பாஸ் சொன்ன வார்த்தை..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. போட்டி முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதாக சொல்லப்படும் நிலையில் பிக்பாஸ் வீடு பல வேடிக்கையான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் நிறைந்து கொண்டிருக்கிறது.
Finale வரை முன்னேறி இருந்த கதிரவன் மூன்று லட்ச ரூபாய் பணமூட்டை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து பணப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அமுதவாணன் பணப்பெட்டியுடன் வெளியேறுவதாக அறிவித்தது போட்டியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தது.
இதனை தொடர்ந்து, மிட் வீக் எவிக்ஷன் நடைபெறும் என பிக்பாஸ் திடீரென அறிவித்திருந்தார். அதில் மைனா வெளியேறி இருக்கிறார். இப்படி அடுத்தடுத்து திருப்பங்களுடன் பிக்பாஸ் சீசன் 6 சென்றுகொண்டிருக்கிறது. இதனிடையே, வீட்டினுள் இந்த போட்டியாளர்களின் பிக்பாஸ் அனுபவங்களை காட்சிப்படுத்தும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றிய காணொளியும் திரையிடப்பட்டது. இதனையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் இருந்தார். முன்னதாக அமுது, ஷிவின் மற்றும் மைனா ஆகியோர் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொருட்களை ஆச்சர்யத்துடன் பார்வையிட்டிருந்தனர்.
அந்த வகையில் விக்ரமன் தனக்கான ஏற்பாட்டை நெகிழ்ச்சியுடன் பார்வையிட்டார். அதன் பிறகு பேசிய விக்ரமன்,"ரொம்ப நன்றி. நெகிழ்வான தருணமா இருக்கு. எனக்கு பேச வார்த்தைகளே இல்ல. எவ்வளவு பெரிய மேடை. உங்க அனைவருக்கும் நன்றி. எளிய மனிதர்களுடைய குரல்களும் கேக்கணும் அப்படின்னு இந்த மேடையை பரந்துபட்டதாக உருவாக்கி இருக்கீங்க. ஜனரஞ்சகமான மேடையில எளிய குரல்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கீங்கன்னா இது ஒரு சாதாரண விஷயம் இல்ல. இது ஒரு புரட்சி. அதுல நானும் பங்கெடுத்திருப்பது மகிழ்ச்சி" என்கிறார்.
தொடர்ந்து பேசும் அவர்,"இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து எங்கேயும் மனக்குறைவு வராம, எந்த இடத்துலயும் கண்ணியத்துக்கு இழுக்கு வராம எல்லா போட்டியாளர்களையும் பாத்துக்கிட்டீங்க. குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி" என்கிறார். அப்போது பேசும் பிக்பாஸ்,"இது என்ன புரட்சி, நீங்க வெளி உலகத்துக்கு போய் செய்யப்போற புரட்சிகளை பார்க்குறதுக்கு நான் ரொம்ப ஆவலா இருக்கேன்" என்கிறார். இதனை கேட்ட விக்ரமன் உணர்ச்சிவயப்பட்ட நிலையில்," ரொம்ப நன்றி தோழரே. உங்களை பிக்பாஸ், பெரியவரே-னு கூப்பிட்டு இருக்கேன். தோழரே என அழைக்கணும்னு ஆசையா இருக்கு. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவர்க்கும், போட்டியாளர்களுக்கும், உலகமெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கும் தலை வணங்குகிறேன்" என்கிறார்.
அப்போது பிக்பாஸ்,"தோழரே, போறதுக்கு முன்னாடி ஒரு சில வார்த்தைகள். ஆனா ஆங்கிலத்துல சொல்லுவேன் பரவாலயா?" என்கிறார். அதற்கு விக்ரமன்,"பரவால்ல, எல்லா மொழியும் ஒண்ணுதானே" எனக்கூற, பிக்பாஸ்,"ஐ லவ் யூ" என்கிறார். இதனை கேட்டு புன்னகைக்கும் விக்ரமன் "லவ் யூ டூ" என்கிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Finalists Asking People To Vote For Them In BiggBoss 6
- Amudhavanan Emotional Talk To Vikraman Before Walk Away
- Vikraman Breaksdown After Amudhavanan Walk Away From BB
- Amudhavanan Opted To Go With Money Suitcase From BiggBoss
- Myna Compliment About Vikraman New Look Bigg Boss 6
- Shivin Comment On Vikraman Coffee Making In BiggBoss
- Vikraman In Tears After BiggBoss Congratulate For His Future
- Amudhavanan And Asal Fun With Vikraman In BiggBoss
- BiggBoss Congratulate Azeem After This Season 6 Amid Finals
- Vikraman Talks To Shivin About How Much Money He Needed
- Robert Pretends As Server Shocked After Hear Vikraman Order
- Vikraman Talks His Family And The Experience He Got In His Journey
தொடர்புடைய இணைப்புகள்
- Vikraman பேசுனது 100 % சரிதான், இந்த அவலம் நாட்டை விட்டு போணும்👌🏻 திருமா அதிரடி🔥 SHORTS
- பெரிய Amount பணப்பெட்டியுடன் வெளியேறிய AMUDHAVANAN... BiggBoss 6 Latest Update
- 'என் தம்பிய ஜெயிக்க வையுங்க.!'ஓட்டு கேட்டு களமிறங்கிய திருமா..சூடுபிடிக்கும் பிக்பாஸ் போட்டி
- "AZEEM, VIKRAMAN-க்கு VOTE பண்ணுங்கனு சொல்ல மாட்டேன்"💥 இவர் தான் WINNER, இதான் Reason🔥 ADK Interview
- திடீரென மயக்கம் போட்டு தரையில் விழுந்த VJ Kathir... பார்த்து சிரித்த Myna
- அழுதுட்டே வெளிய போன SHIVIN 😢 KATHIR GIRLFRIEND வந்தது தான் காரணமா?
- Kathirravan-னை கண்கலங்க வைத்த Bestie❤️… இன்னும் கொஞ்ச நாள் இருந்து Win பண்ணிட்டு வா
- ADK பார்க்க வந்த அப்பா…காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய Rachitha
- AZEEM மாதிரி பேசி அசத்திட்டாரு😂... Bigg Boss வீட்டை சிதறவிட்ட Amudhavanan மகன்
- "MYNA, நீ Bigg Boss-க்கு லாய்க்கே இல்ல.." Upset ஆன Myna Husband Yogesh
- Bigg Boss Task, எங்களுக்கே வெறுப்பா இருக்கும் 😟டேய் எங்க இருந்து டா வாரீங்க? - Janany
- ബിഗ്ബോസ് താരദമ്പതികളായ ഫിറോസിൻ്റേയും സജ്നയുടേയും വീട് അടിച്ച് തകർത്തു | താരങ്ങളുടെ ആദ്യ