www.garudabazaar.com
iTechUS

"வந்த வேலை முடிஞ்சுருச்சுன்னு நெனைக்குறேன்".. பிக் பாஸ் முன் கண்ணீர் விட்ட ஷிவின்.. Emotional!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், தற்போது மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு சில தினங்கள் மட்டும் மீதம் இருப்பதாக தெரியும் நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் யார் இந்த முறை டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட போகிறார்கள் என்பது பற்றியது தான்.

Shivin emotional after bigg boss words about her journey

Also Read | "சிட்டிக்கு உயிர் வந்துருச்சு".. பீஃப் பிரியாணி சாப்பிட்ட விக்ரமன் பத்தி ராம் கமெண்ட்.. சிரிச்ச ஹவுஸ்மேட்ஸ்

Finale வரை முன்னேறி இருந்த கதிரவன் மூன்று லட்ச ரூபாய் பணமூட்டை எடுத்துவிட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில் அது சுமார் 10 லட்சம் ரூபாய் தாண்டி சென்று கொண்டிருப்பதாகவும், தற்போது உள்ள எந்த போட்டியாளர்களும் இதுவரை அதை எடுக்க முன்வரவில்லை என்றும் தெரிகிறது.

மறுபக்கம் விக்ரமன், அசிம், அமுதவாணன், மைனா நந்தினி மற்றும் ஷிவின் ஆகியோர் Finale-வுக்கு முன்னேறி உள்ள நிலையில், இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பற்றியும் தங்களின் கருத்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Shivin emotional after bigg boss words about her journey

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி சுற்று வரை முன்னேறி உள்ள போட்டியாளர்கள் பற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நிறைய தனித்தனியாக போட்டியாளர்களுக்கு காண்பிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் வண்ணமயமான புகைப்படங்கள், பொருட்கள் என அவர்கள் மனம் கவரும் வகையிலும் சுற்றியுள்ள விஷயங்கள் அமைந்துள்ளது. இதனைக் காணும் போட்டியாளர்கள், ஒரு நிமிடம் மனம் கலங்கி தான் போகின்றனர். தன்னை பற்றிய நினைவுகளை கண்டு அமுதவாணன் பிரம்மித்து போய் நிற்க, "என்னோட அமுது காமெடியன் இல்ல கலைஞன்" என பிக் பாஸ் கூறுகிறார். இதனைக் கேட்டதும் கண் கலங்கி போகிறார் அமுதவாணன்.

Shivin emotional after bigg boss words about her journey

அதே போல, மைனாவும் தனது மகன் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த வீடியோவை திரையில் பார்த்து கண்ணீர் விடவும் செய்கிறார். இதே போல, ஷிவினும் தன்னை பற்றி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு சொக்கி போகிறார். அப்போது அவரிடம் பேசும் பிக் பாஸ், "ஷிவின் உங்களால இந்த வீட்டுக்கும், ஒரு நிகழ்ச்சிக்கும், ஏன் ஒரு சமூகத்துக்கே பெருமை. இனி நீங்க எந்த ஊருக்கும் போய் ஒளிய வேண்டாம். வெளி உலகத்துல நீங்க காலடி எடுத்து வைக்கும் போது பல தாய்மார்கள் உங்களை அவங்க வீட்டு பொண்ணா நெனச்சு, வரவேற்க தயாரா இருக்காங்க" என பிக் பாஸ் கூறியதுமே கண்ணீர் விட்டு அழ தொடங்கி விட்டார் ஷிவின்.

Shivin emotional after bigg boss words about her journey

இதற்கு பதில் சொல்லும் ஷிவின், "எல்லாத்துக்கும் நன்றி. நான் வந்த வேலை முடிஞ்சுதுன்னு நெனைக்கிறேன்" என்றும் கண்ணீர் மல்க உருக்கத்துடன் குறிப்பிட்டு இருந்தார்.

Also Read | "நான் சூர்யா மாதிரி இருக்கேனு சொன்னாங்க".. Ex லவ்வர் பற்றி விக்ரமன்.. விழுந்து சிரிச்ச ஹவுஸ்மேட்

தொடர்புடைய இணைப்புகள்

Shivin emotional after bigg boss words about her journey

People looking for online information on Bigg boss, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Shivin will find this news story useful.