www.garudabazaar.com
iTechUS

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மைனா.. கலங்கி அழுத ஷிவின்.. விக்ரமனின் நெகிழ்ச்சி sent off..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இதனால் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Shivin breaksdown after Myna Nandhini evicted from BB6

முன்னதாக, Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தார். இப்படி பரபரப்பான சம்பவங்களுக்கு இடையே பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷன் குறித்து வெளியிட்ட அறிவிப்பு போட்டியாளர்களை திகைக்க வைத்திருந்தது.

அதன்படி போட்டியாளர்கள் அனைவரும் ஒரு ஹைடிராலிக் மேடை மீது ஏறவேண்டும். அது மறைவிற்கு பின்புறம் கீழே இறங்குகிறது. எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்படும் போட்டியாளர்கள் அந்த ஹைடிராலிக் மேடை மூலமாக மீண்டும் மேலே வரலாம். ஆனால், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மைனா அந்த மேடையில் ஏற, ஷிவின் கண்கள் கலங்கியபடி அவரை பார்த்துக்கொண்டிருக்கிறார். பின்னர் கீழிறங்கிய மேடை காலியாக மேலே வந்ததை கண்டு மைனா வெளியேற்றப்பட்டிருப்பதை உணர்ந்துகொண்ட போட்டியாளர்கள் பெரும் சோகமடைந்தனர். அப்போது ஷிவின் உடைந்து அழுகிறார். அங்கிருந்த விக்ரமன்,"இந்த வீட்டுல நான் வந்த புதுசுல என்னை மகிழ்வித்த நபர் நீங்க. ஆரம்பத்துல உங்ககூட மனக்கசப்பு வந்துச்சு. சண்டைபோட்டோம். அதுக்கப்புறம் உங்ககூட ஒரு பிணைப்பு வந்துச்சு. ஒரு தங்கச்சி மாதிரி உங்களை நினைச்சேன். வாழ்த்துக்கள் மைனா" என்கிறார்.

மைனா வெளியேறியதால் சோகமடைந்த ரச்சிதா இந்த எவிக்ஷன் சங்கடத்தையும் பயத்தையும் ஒருசேர ஏற்படுத்தியதாக கூற, அருகே நின்றிருந்த சாந்தியும் ஆம் என்கிறார். பிக்பாஸ் வீட்டினுள்  இறுதியில் அசீம், விக்ரமன் மற்றும் அசீம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் நாளை வெற்றியாளர் யார் என தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Shivin breaksdown after Myna Nandhini evicted from BB6

People looking for online information on Biggboss6Tamil, Myna, Shivin, Vikraman will find this news story useful.