www.garudabazaar.com
iTechUS

Vikraman : “இப்படியே இருங்க விக்கூ.. பொண்ணுங்க சைட் அடிப்பாங்க”.. விக்ரமன் நியூ லுக் பற்றி மைனா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனால் போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

myna compliment about vikraman New look bigg boss 6

Also Read | நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட டைட்டில் இதுவா?! .. பூஜையுடன் வெளியான புகைப்படங்கள்..

நேரம் ஆக , ஆக பணமும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். அந்த சூழ்நிலையில் அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் பணமூட்டையை கட் செய்து தான் 3 லட்ச ரூபாயுடன் வெளியேறுவதாக பிக்பாஸிடம் தெரிவித்திருந்தார். இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் என சக போட்டியாளர்கள் கவலையுடன் கதிரிடம் தெரிவித்திருந்தனர். தான் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என சொல்லிய கதிர், பிரியாவிடை பெற்று வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் பண மூட்டையை போலவே நேரம் ஆக, ஆக பணத்தொகையும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். தற்போது 10 லட்ச ரூபாயை தாண்டி பணம் அதிகரித்திருக்கும் நிலையில் யார் அந்த பெட்டியுடன் வெளியேற போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.   தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுள் ஒருவர் மக்களின் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது. முன்னதாக பிரபல அரசியல் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரமனுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

myna compliment about vikraman New look bigg boss 6

இந்நிலையில், விக்ரமன் அணிந்திருக்கும் சட்டை நன்றாக இருப்பதாக மைனா சொல்ல,  “தேங்க் யூ மைனா. அது ராமுடையது” என்கிறார்.  மேலும் பேசும் மைனா, “வெளிய போகும்போது இப்படியே போங்க.. மிகவும் யங் லுக்கா இருக்கீங்க விக்கு. பொண்ணுங்க பார்த்தா சைட் அடிப்பாங்க” என சொல்ல உடனே, நிவாஷினி,  “மகேஸ்வரி” என சொல்ல, மைனா சிரித்தபடி “சும்மா இருமா” என கூறுகிறார். பிறகு விக்ரம் வெட்கப்பட்டபடி உள்ளே செல்ல, நிவாஷினி, மைனா, ஆயிஷா சிரித்தபடி அமர்ந்திருக்கின்றனர்.

தொடக்கத்தில் மிகவும் கறாராகவும் கருத்தியலாகவும் விக்ரமன் தீவிரமாக பேசியதாக அவர் மீது ஒரு பிம்பம் இருந்தது. போகப்போக விக்ரமன் அனைவருடனும் எதார்த்தமாகவும் கலகலப்பாகவும் பேசியதுடன், விளையாடுவது, ஃபன் பண்ணுவதும் செய்வதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | Run baby Run : “Highways-ல கார் ஓட்டுற Scene.. எதிர்ல லாரி வந்துடுச்சு”.. “அப்போ டைரக்டர் சொன்னது..” - RJ பாலாஜி Fun Speech

தொடர்புடைய இணைப்புகள்

myna compliment about vikraman New look bigg boss 6

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil will find this news story useful.